தேசிய செய்திகள்

நடிகை கங்கணா மீதான புகார்; நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்

நடிகை கங்கணா மீதான புகார் குறித்து போலீசார் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனர்.

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை புண்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக அலிப் காசிப் கான் தேஷ்முக் என்ற வக்கீல் அம்போலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த புகாரை விசாரித்த கோர்ட்டு இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அம்போலி போலீசாருக்கு உத்தரவிட்டது. கோர்ட்டு வழங்கிய காலக்கெடு முடிந்து போலீசார் அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருந்தனர்.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீதான புகார் குறித்து நடத்திய விசாரணை அறிக்கையை கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர். இதையடுத்து கோர்ட்டு விசாரணையை ஏப்ரல் 5-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு