தேசிய செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு - காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியதும், இந்திய ஆரசு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டு இருந்த பதிவில், 'இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் துணையாக நிற்கிறோம்' என தெரிவித்தார் 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்