புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் இதுதொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அன்னிய நேரடி முதலீட்டுக்கொள்கையில் தாராளமயம் ஆக்கி இருப்பது, மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் என்னும் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முரணாக அமைந்துள்ளது. எங்கள் ஆட்சியின்போதும் அன்னிய முதலீடுகளை அனுமதித்தோம். அதே நேரத்தில், இந்தியாவில் இருந்துதான் 30 சதவீத மூலப்பொருட்களை பெற வேண்டும் என்று பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தோம் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, அன்னிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரையில் பாரதீய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்தது. இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறபோது, அதை அமல்படுத்துகிறது என சாடினார்.
பொதுத்தேர்தலின்போது பாரதீய ஜனதா கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் ஆர்.பி.என். சிங் குற்றம் சாட்டினார்.