தேசிய செய்திகள்

இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதை

இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் ம​ரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

இந்தியாவின் 3-வது பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது சீக்கியப் பாதுகாவலர்களால் 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

சீக்கியர்களின் பொற்கோவிலில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து வட இந்திய தலைநகரங்களில் நடந்த கலவரங்களில் 5000-க்கும் மேற்பட்ட அப்பாவி சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திரா காந்தியின் 35-வது நினைவுநாளையெட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சேனியா காந்தி, மன்மேகன் சிங் உள்ளிட்டேர் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35வது நினைவுதினத்தையொட்டி நாடு முழுவதும் இந்திரா காந்தியின் திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு