தேசிய செய்திகள்

லக்னோ வந்த பிரதமர் லகிம்பூர் செல்லவில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

வாரணாசி தொகுதியில் நடைபெற்ற கிஷான் நியாய் பேரணியில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.

லக்னோ,

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வாரணாசியில் பேசியதாவது:- பிரதமர் மோடி தான் பயணிப்பதற்காக ரூ. 16 ஆயிரம் கோடிக்கு இரண்டு விமானங்களை வாங்கினார். ஆனால், நாட்டுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தை தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு 18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

போராடும் விவசாயிகளை கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் என்கிறார் பிரதமர். உத்தர பிரதேச முதல்வரோ, விவசாயிகளை குண்டர்கள் என்கிறார். மந்திரி அஜய் குமார் மிஸ்ராவோ, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை இரண்டே நிமிடத்தில் வழிக்கு கொண்டு வர முடியும் என்கிறார்.

மந்திரி அஜய் மிஸ்ராவை வெளிப்படையாகவே யோகி ஆதித்யநாத் பாதுகாக்கிறார். லக்னோ வர முடிந்த பிரதமருக்கு, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற லகிம்பூர் செல்ல முடியவில்லை என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு