கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நிதிஷ்குமார் அரசில் காங்கிரஸ் கட்சிக்கு 3 மந்திரி பதவி

நிதிஷ்குமார் அரசில் காங்கிரஸ் கட்சிக்கு 3 மந்திரி பதவி அளிக்கப்படுகிறது.

பாட்னா,

பீகாரில் பா.ஜனதா உறவை துண்டித்துக்கொண்ட முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். தேஜஸ்வி யாதவ், துணை முதல்-மந்திரியாக பதிவு ஏற்றுள்ளார். இவர்கள் 2 பேர் மட்டுமே இதுவரை பொறுப்பேற்றுள்ளனர்.

நாளை (செவ்வாய்க்கிழமை) புதிய மந்திரிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று தெரிகிறது. இந்தநிலையில், பீகாருக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பக்த சரண்தாஸ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பட்டியில் கூறியதாவது:-

நிதிஷ்குமார் அரசில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை மந்திரி பதவி என்பது இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரசுக்கு 3 மந்திரி பதவி அளிக்கப்படுகிறது.

முதலில், 16-ந் தேதி நடக்கும் மந்திரிசபை விஸ்தரிப்பின்போது காங்கிரசை சேர்ந்த 2 பேர், மந்திரிகளாக பதவி ஏற்பார்கள். மீதி ஒருவர், அடுத்த விஸ்தரிப்பின்போது பதவி ஏற்பார். காங்கிரஸ் சார்பில் யார் யாரை மந்திரி ஆக்குவது என்று 15-ந் தேதி (இன்று) முடிவு செய்யப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு