தேசிய செய்திகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க சதி: பாஜகவின் சதித்திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது - டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க நினைக்கும் பாஜகவின் சதித்திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு கூட்டணி அரசை கவிழ்த்தது போல தற்போது காங்கிரஸ் அரசை கவிழ்க்க எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கனிகா ராவ் கூறியிருந்தார்,

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மிகப்பெரிய சதித்திட்டம் நடைபெறுவது குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், எனினும் அது ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கோடிக்கணக்கில் பணம், அமைச்சர் பதவி என்றெல்லாம் கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருவதாகவும், அது நிச்சயம் தோல்வியில் முடியும் என்றும் தெரிவித்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்