அலகாபாத்:
திருமணத்திற்காக மட்டுமே மதமாற்றம் செய்வது செல்லுபடியாகாது என்று உத்தரபிரதேச மாநில அலகாபாத் ஐகோர்ட் ஒரு வழக்கில் தீர்ப்பளித்து உள்ளது. புதிதாக திருமணமான தம்பதியினரின் மனுவை தள்ளுபடி செய்யும் போது நீதிமன்றம் இந்த கருத்தை வெளியிட்டது.
பிரியான்ஷி என்கிற சம்ரீன் மற்றும் அவரது மனைவி இருவரும் தாக்கல் செய்தனர். காவல்துறையினருக்கும், பெண்ணின் தந்தைக்கும் தங்கள் திருமண வாழ்க்கையை தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிடகோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
மனுவை நிராகரித்த நீதிமன்றம், "முதல் மனுதாரர் 2020 ஜூன் 29 அன்று தனது மதத்தை மாற்றியுள்ளார், ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர்கள் ஜூலை 31, 2020 அன்று தங்கள் திருமணத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர், இது இந்த நீதிமன்றத்திற்கு தெளிவாக வெளிப்படுத்துகிறது. திருமண நோக்கத்திற்காக மட்டுமே அவர் மதம் மாறி உள்ளார என நீதிமன்றம் சுட்டிகாட்டியது. இதனால் மனுவை ஐகோர் நிராகரித்தது.
மேலும் 2014 நூர் ஜஹான் பேகம் வழக்கை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது, அதில் திருமண நோக்கத்திற்காக மதம் மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறப்பட்டு உள்ளது.
அந்த வழக்கில் சிறுமி இந்து என்பதால் இஸ்லாத்திற்கு மாறிய பின்னர் திருமணம் செய்து கொண்டதால் திருமணமான தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நூர் ஜஹான் பேகம் தாக்கல் செய்த வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் அந்த மனுவை நிராகரித்து இருந்தது.