புதுடெல்லி
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதன் மூலம் ஆர்.பி.ஐ கட்டுப்பாட்டில் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநிலங்களின் 58 கூட்டுறவு வங்கிகள் வருகின்றன.1,540 கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடிக்கும் மேற்பட்ட வைப்புத் தொகையாளர்களின் 4,84,000 கோடி ரூபாய் பணம் பாதுகாப்பாக இருக்கும் என கூறினார்.