புதுடெல்லி,
அலைபேசியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும், குரல் வழி செய்தியை அகற்றுவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், பல்வேறு தரப்பிலிருந்தும் அலைபேசியில் கெரேனா விழிப்புணர்வு செல்பேசி ஆடியே செய்திக்கு எதிராக புகார்கள் வந்திருப்பதாக டிராய் கூறியுள்ளது.
எனவே, பொது நலனை கருத்தில் கொண்டு அழைப்புக்கு முன்பாக இத்தகைய விழிப்புணர்வு செய்தி மேற்கொள்ளப்படுவதாக டிராய் தெரிவித்துள்ளது எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.