தேசிய செய்திகள்

கொரோனா நெருக்கடி; உண்மையான சூப்பர்மேன் யாரென உலகம் புரிந்து கொண்டது: ராஜ்நாத் சிங்

கொரோனா நெருக்கடிக்கு பின் உண்மையான சூப்பர்மேன் சுகாதார பணியாளர்கள் என இந்த உலகம் புரிந்து கொண்டுள்ளது என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலை கழக அடிக்கல் நாட்டு தின நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியே கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசும்பொழுது, பிரிட்டனில் புதிய கொரோனா வைரசை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். போராட்டம் இன்னும் முடிந்து விடவில்லை. இது தீவிர விவகாரம். உலகத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தடுப்பு மருந்து எடுத்து கொள்ளும் வரை இந்த போராட்டம் தொடரும்.

கொரோனா நெருக்கடிக்கு பின்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோரே உண்மையான சூப்பர்மேன் மற்றும் ஆச்சரிய பெண்மணிகள் என இந்த உலகம் புரிந்து கொண்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவையாற்றிய அவர்களுக்கு நாம் எப்பொழுதும் நன்றி கடன்பட்டவர்களாக இருப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்