திஸ்பூர்,
அசாம் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசாமில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,11,211 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,011 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் நேற்று ஒரே நாளில் 159 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,01,468 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 2,385 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.