புதுடெல்லி,
உலக அளவில் கொரோனா வைரசால் 85 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா அதிகம் பாதித்த உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, இந்தியாவின் மக்கள் தொகை அதிகம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சூழ்நிலை அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதில், இந்தியா அதிக மக்கள் தொகை அடர்த்தியை கொண்டுள்ளபோதிலும், ஒரு லட்சம் மக்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விகிதம் என்பது மிக குறைவாகவே உள்ளது என தெரிவித்து உள்ளது.
இதன்படி, இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் கொரோனா பாதித்தோரின் விகிதம் 30.04 ஆக உள்ளது. இதுவே உலகளவிலான சராசரியானது 114.67 என 3 மடங்கு அதிகம் கொண்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55.77% ஆக அதிகரித்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.