தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,984 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,984 ஆக உயர்வடைந்து உள்ளது.

புதுடெல்லி,

உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா பரவல் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 18,601 ஆக இருந்தது. நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. 232 பேர் பலியாகி இருந்தனர். 572 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 3,870 பேர் குணமடைந்தும், 15,474 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,984 ஆக உயர்வடைந்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு