மும்பை,
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தாராவியில் இன்று ஒரே நாளில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,621 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 54,758 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் இதுவரை 1,792 பேர் உயிரிழந்துள்ளனர்.