தேசிய செய்திகள்

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி; 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி...!

மூக்கு வழியாக செலுத்தும் வகையிலான கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில், பாரத் பயோடெக் உருவாகியுள்ள மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அனுமதி வழங்கியுள்ளது. மூக்குவழியாக செலுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசாக பயன்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் 9 இடங்களில் இந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற உள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு 3-வதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூக்கு வழியாக செலுத்தப்பட்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

3-ம் கட்ட சோதனைக்கு பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூக்குவழியாக செலுத்த மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுப்பதுடன், சுகாதாரத்துறை பணியாளர்களின் வேலைப்பளு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை