புது டெல்லி,
2019-20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், வருமான வரி உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து செப்.30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் நிறைவடைகின்றது.இந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் இரண்டு மாதங்கள் அதாவது நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.