தேசிய செய்திகள்

10 நாட்களுக்குள் இரண்டாவது முறை: கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் வந்தது

இந்தியாவில் 10 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக கொரோனா தினசரி பாதிப்பு, 10 ஆயிரத்துக்குள் வந்தது.

கட்டுக்குள் பரவல்

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2-ந் தேதி தினசரி கொரோனா பாதிப்பின் அளவு 10 ஆயிரத்துக்குள் (8,635) குறைந்தது. இதுதான் 8 மாதங்களில் மிகக்குறைந்த பாதிப்பு ஆகும். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் புதிதாக 9,110 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது.10 நாட்களுக்குள் தினசரி பாதிப்பின் அளவு இரண்டாவது முறையாக 10 ஆயிரத்துக்குள் வந்துள்ளது.

இதன்மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 47 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.

மீட்பு அதிகரிப்பு

நேற்று ஒரு நாளில் கொரோனா தாக்குதலுக்கு புதிதாக ஆளானோர் எண்ணிக்கையை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. நேற்று நாடு முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 16 ஆகும். அவர்களில் கேரளாவில் அதிகபட்சமாக 5,959 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் 3,423 பேர் கொரோனாவில் இருந்து நலம் பெற்றுள்ளனர். கெரோனாவில் இருந்து இதுவரை நாட்டில் 1 கோடியே 5 லட்சத்து 48 ஆயிரத்து 521 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். உலகிலேயே கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தில் தொடர்கிறது. கொரோனா மீட்பு விகிதம் என்பது 97.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பலி குறைகிறது

இந்தியாவில் கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலிகளின் அளவு தொடர்ந்து குறைந்து வருவது நிம்மதிப்பெருமூச்சுவிட வைக்கிறது. நேற்று கொரோனாவால் 78 பேர் மட்டுமே இறந்துள்ளனர். தொடர்ந்து 4-வது நாளாக பலி 100-க்குள் அடங்கி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. நேற்று பலியானவர்களில் 16 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 15 பேர் மராட்டிய மாநிலத்திலும், 11 பேர் பஞ்சாப் மாநிலத்திலும் பலியாகி இருக்கிறார்கள்.

இதுவரை நாட்டில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 158 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். பலியானோர் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம், தொடர்ந்து முதல் இடத்தை வகித்து வருகிறது. அங்கு 51 ஆயிரத்து 325 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு தொடர்கிறது. மூன்றாமிடத்தை 12 ஆயிரத்து 239 பேரை இழந்துள்ள கர்நாடகம் வகிக்கிறது. இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம் 1.43 சதவீதமாக உள்ளது.

சிகிச்சை பெறுவோரும் குறைவு

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தொடர் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 623 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.32 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2 லட்சத்துக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்