தேசிய செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து பொதுமக்களுக்கான அரசாக செயல்படுகிறது: அமித் ஷா

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது என அமித் ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை நேற்று மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான சில்லரை விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வரி குறைப்பு செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

உற்பத்தி வரி குறைப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு தலா ரூ.2 குறைகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இந்த முடிவை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா வரவேற்றுள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வேதச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் அதனை குறைக்கும் வகையில் அரசு முடிவெடுத்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிவாரணம் பெறும் வகையில் அவர்களுக்கு பிரதமர் மோடி அரசானது முக்கியத்துவம் அளித்து வருவதனை இது வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு