தேசிய செய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 73 ஆக உயர்வு - தொற்றுக்கு ஒருவர் பலி

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 73 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 73 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 859 ஆக அதிகரித்தது.

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 48 பேர் குணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 424 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 24 அதிகரித்தது. மொத்தம் 1,508 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு இல்லாத நிலையில், நேற்று ஒருவர் பலியானார். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 927 ஆக உயர்ந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு