தேசிய செய்திகள்

டோக்லாம் சர்ச்சை சண்டைக்கு வித்திடாது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் - தலாய் லாமா

இந்தியாவும், சீனாவும் டோக்லாம் பகுதியில் மோதிக்கொள்ளும் நிலையில் இருந்தாலும் போர் வராது என்றும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணலாம் என்றும் தலாய் லாமா தெரிவித்தார்.

புதுடெல்லி

சில நேரங்களில் அதிக சப்தத்தையும், கடுஞ்சொற்களையும் காண முடிகிறது ஆனால் அவை கவலைக்குரியவை இல்லை என்றார் 14 ஆவது தலாய் லாமா. டெல்லியில் கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இரதரப்புமே ஒருவரையொருவர் அழித்துக்கொள்ளும் தகுதியுடன் இருப்பதால் இருவருமே சண்டையை விரும்பவில்லை என்றார் அவர். மேலும் 1962 ஆம் ஆண்டில் சீனா தான் முன்னேறி கைப்பற்றிய பகுதிகளை கைவிட்டு பின் வாங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நூற்றாண்டு போர் அற்றது என்பதைக் காட்டும் விதமாக பிரச்சினைகளை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர். வரலாற்று ரீதியில் இரு நாடுகளும் அண்டை நாடுகள். மேலும் சீன மக்களுக்கு இந்தியா மீது எவ்விதமான எதிர்மறையான கருத்துக்களும் இல்லை. சில நேரங்களில் அரசு தகவல்களை ஊதிப்பெருக்கி அப்படியொரு வெறுப்பை ஏற்படுத்த முயன்றாலும் சீன மக்களுக்கு இந்தியா மீது வெறுப்பில்லை என்றார் லாமா. அரசுகள் மாறலாம், ஆனால் மக்கள் மாறுவதில்லை என்றார் அவர்.

அமைதியான் சூழலை ஏற்படுத்த இந்தியா கல்வி கற்கும் சீன மாணவர்களுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் சீன புத்தமதத் துறவிகள் புனித யாத்திரை வந்து செல்ல அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் இருதரப்பு மக்களும் பரஸ்பரம் அதிகமாக ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று யோசனை கூறினார் திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்