தேசிய செய்திகள்

குஜராத்தில் மீசை வைத்திருந்ததாக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்

குஜராத்தில் இரு தலித் இளைஞர்கள் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

காந்திநகர்,

காந்திநகரில் லிம்போதாரா கிராமத்தில் மீசை வைத்திருந்த காரணத்திற்காக ராஜ்புத் சமூதாயத்தினரால் இரு இளைஞர்கள் தாக்கப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 25 மற்றும் 29-ம் தேதிகளில் இச்சம்பவங்கள் நடைபெற்று உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 29 சம்பவத்தில் குர்ணால் மஹேரியா என்ற வாலிபர் பாராத்சிங் வகேலாவால் என்பவரால் தாக்கப்பட்டு உள்ளார்.

குர்ணால் மஹேரியா பேசுகையில், வெள்ளிக்கிழமை இரவு என்னுடைய நண்பரை பார்க்க சென்றேன். அப்போது வகேலா மற்றும் சிலர் என்னை இடைமறித்தனர். மீசை வைத்திருப்பதால் மட்டும் ராஜ்புத் ஆகிவிடமுடியாது என்றனர். அவர்களை புறக்கணித்து செல்ல முயன்ற போது, என்னை வகேலா தாக்கினார், என கூறிஉள்ளார். அவருடைய புகாரின் கீழ் வகேலாவிற்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்த போலீஸ் அவரை கைது செய்து உள்ளது. செப்டம்பர் 25-ம் தேதியும் பியுஷ் பார்மெர் என்பவரை இதே காரணத்திற்காக சிலர் தாக்கி உள்ளனர்.

இதுதொடர்பாக கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை, போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது