திருவனந்தபுரம்,
இஸ்ரோ தலைவராக இருந்தவர் மாதவன் நாயர் (வயது 75). இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கடிதம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பெயரில் அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து மாதவன் நாயர் கொடுத்த புகாரின் பேரில் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவன் நாயர் சமீபத்தில் தான் பா.ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.