தேசிய செய்திகள்

விபத்தில் தீப் சித்து மரணம் காதலர் தினத்தை கொண்டாட அமெரிக்காவில் இருந்து வந்த காதலி உயிர் தப்பினார்

விபத்தில் தீப் சித்து மரணம் காதலி உயிர் தப்பினார் காதலர் தினத்தை கொண்டாட அமெரிக்காவில் இருந்து வந்தவர்.

புதுடெல்லி

அரியானா மாநிலம் சோனிபட் அருகே நடந்த விபத்தில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து உயிரிழந்தார்.

நடிகர் தீப் சித்து டெல்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்கு நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தார். குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டு இருந்க்கும் போது எத்ரே வந்த டிரெய்லர் மீது கார் மோதியது இதில் தீப் சித்து படுகாயம் அடைந்தார்.உடனடியாக அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கார்கோடா மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்று அவர் சித்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தீப் தனது காதலியான அமெரிக்காவை சேர்ந்த ரீனா ராய் உடன் காரில் சென்றுள்ளார். ரீனா உயிர்தப்பி விட்டார்.ரீனாவின் உயிர் காப்பாற்றப்பட்டது, ஆனால் அவரது காதல் கதை முடிவுக்கு வந்தது. ரீனா அமெரிக்காவில் இருந்து காதலர் தினத்தை தீப் சித்துவுடன் கொண்டாட வந்து இருந்தார். காதலர் தினத்தன்று, இருவரும் தங்கள் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

2021 குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் தீப் சித்து. அவரது முதல் பஞ்சாபி திரைப்படம் 'ராம்தா ஜோகி' 2015-ல் வெளியானது.தீப் சித்துவின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் சன்னி மற்றும் நடிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு