கோப்பு படம் (பிடிஐ) 
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று மட்டும் 20 நோயாளிகள் உயிரிழப்பு- டெல்லி மருத்துவமனை அதிர்ச்சி தகவல்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று மட்டும் 20 நோயாளிகள் உயிரிழந்ததாக டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி கொரோனாவின் பிடியில் சிக்கி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அங்குள்ள பல ஆஸ்பத்திரிகளில் தீவிரமான பாதிப்பில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் நெருக்கடி தொடர்கிறது.

இந்த நிலையில் டெல்லி ராஜேந்திரா நகரில் அமைந்துள்ள சர் கங்காராம் தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் நெருக்கடியால், மிக மோசமான நிலையில் இருந்து வந்த 25 கொரோனா நோயாளிகள் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களின் இறப்புக்கு காரணம் குறைந்த அழுத்த ஆக்சிஜன்தான் என ஒரு தகவல் கூறுகிறது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த செய்தி ஏற்படுத்தியிருந்த நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு 20 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் சப்ளை இன்னும் அரை மணி நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் மேலும் 200- பேரின் உயிருக்க்கு ஆபத்து இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்