கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

டெல்லியில் 1,500 மின்சார பேருந்துகளை பொதுப்போக்குவரத்துக்கு பயன்படுத்த அரசு ஒப்புதல்

இந்த மின்சார பேருந்துகளை 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 11 வழித்தடங்களில் இயக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் பொதுப் போக்குவரத்தில் 1,500 தாழ்தள மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கெஜ்ரிவால் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து மின்சாரப் பேருந்துகளை உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் உள்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு மொத்தம் 11 வழித்தடங்களில் இயக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளை இயக்க ஓட்டுநர் உரிமத்துடன், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் பதவிக்கான பயிற்சியின் போது பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மாதம் ரூ.6,000-லிருந்து ரூ.12,000 ஆக உயர்த்தவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லி மின் வாகனக் கொள்கை 2020 இன் கீழ் மின்சார வாகன (இவி) சார்ஜிங் ஸ்டேஷன்கள் மற்றும் பேட்டரி அவாப்பிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்காக பல்வேறு ஏஜென்சிகளுக்கு 10 தளங்களை ஒதுக்க டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்