தேசிய செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை - முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சீனாவில் உகான் நகரில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பல மாநிலங்களில் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 28 பத்திரிகையாளர்களுக்கும், மும்பையில் 53 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த 53 பேரும் கொரோனா அறிகுறி இல்லாமல் இருந்தது அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மும்பையில் நடத்தப்பட்டதைப் போல டெல்லியிலும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுமாறு டுவிட்டரில் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதில் அளித்துள்ள கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், நிச்சயமாக நாங்கள் அதை செய்வோம்,' என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்