கடந்த மாதம், சிராக் பஸ்வானை தனிமைப்படுத்தி விட்டு, அவருடைய சித்தப்பா பசுபதி குமார் பராஸ் (தற்போது, மத்திய மந்திரி) தலைமையில் 5 எம்.பி.க்களும் தனி அணியாக பிரிந்தனர். லோக் ஜனசக்தி கட்சியின் மக்களவை குழு தலைவராக பசுபதி குமார் பராஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அளித்தனர். அதை ஏற்று, பசுபதி குமார் பராசை மக்களவை கட்சி தலைவராக ஓம் பிர்லா அங்கீகரித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் சிராக் பஸ்வான் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி ரேகா பள்ளி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சிராக் பஸ்வானுக்கு அபராதம் விதிக்க நீதிபதி முடிவு செய்தார். இருப்பினும், சிராக் பஸ்வானின் வக்கீல் வேண்டுகோளை ஏற்று அம்முடிவை கைவிட்டார்.