தேசிய செய்திகள்

தமிழகம்-கர்நாடகம் இடையேயான நதிநீர் பிரச்சினை குறித்து கர்நாடக முதல்-மந்திரி அதிகாரிகளுடன் ஆலோசனை!

நதிகள் இணைப்பு திட்டத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கர்நாடக அரசின் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும், நீர்ப்பாசன திட்டங்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் நதிகள் இணைப்பு திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றிருக்கிறார்.

தலைநகர் டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இன்று காலை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் அவர், கர்நாடக எம்.பி.க்கள் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக நீர்ப்பாசன திட்டங்கள், நதிநீர் இணைப்பு, மேகதாது அணை விவகாரம் குறித்து எம்.பி.க்கள், மத்திய மந்திரிகளின் கருத்துகளை கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணா, மகதாயி உள்ளிட்ட நீர் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உடனிருந்தனர். முன்னதாக கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நதிகள் இணைப்பு திட்டத்தில் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்றும், இதில் கர்நாடகத்தின் நீர்பங்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லியில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை திட்டவட்டமாக நேற்று கூறியிருந்த நிலையில் இன்று இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு