தேசிய செய்திகள்

கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னர் 3 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் பயணத்தை தவிர்த்தனர்!

கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னர் டெல்லி மெட்ரோ ரெயில்வே 3 லட்சம் பயணிகளை இழந்து உள்ளது என தெரியவந்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி மெட்ரோ ரெயில் பயண கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னர் நிர்வாகத்திற்கு பெரும் இழப்புதான் நேரிட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது. கட்ட உயர்வுக்கு பின்னர் மெட்ரோ ரெயில் 3 லட்சம் பயணிகளை இழந்து உள்ளது என்றும் ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகலில் தெரியவந்து உள்ளது.

டெல்லி மெட்ரோ ரெயில் கட்டணம் மே மாதத்திற்கு பின்னர் அக்டோபர் மாதமும் மீண்டும் உயர்த்தப்பட்டது. மத்திய அரசால் நிர்வாகம் செய்யப்படும் மெட்ரோ ரெயில் கட்டணத்தை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்த போது, இழப்பை ஏற்க டெல்லி அரசு தயாரா என மத்திய அரசு தரப்பில் கேள்வி எழுப்பட்டது. இப்போது 20 முதல் 50 சதவித அளவிலான கட்டண உயர்வினால் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒரு நாளில் 3 லட்சம் பயணிகளை இழந்து உள்ளது என தெரியவந்து உள்ளது. பயணிகள் தரப்பில் பெரும் செலவாக பார்க்கப்படுகிறது.

புதுடெல்லியில் காற்றின் தரம் அளவு என்பது மோசமான நிலையை கடந்து உள்ளது என ஏற்கனவே மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காற்று மாசுபாடு காரணமாக டெல்லி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். வாகன புகை மற்றும் அண்டைய மாநிலங்களில் இருந்து காற்றில் கலந்துவரும் குப்பைகள் மற்றும் புகைமூட்டங்கள் டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு காரணமாக கூறப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை