தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து ஆசி பெற்றார் ராம்நாத் கோவிந்த்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளாராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்த் சந்தித்து ஆசி பெற்றார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 28-ந் தேதி முடிவடைகிறது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா முயற்சி மேற்கொண்டது. திடீரென, பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டார். ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அதிகமாக உள்ளதால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை ராம்நாத்கோவிந்த் சந்தித்து பேசினார். இந்த நிலையில், இன்று பாரதீய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் இல்லத்துக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்.

தனது மனைவியுடன் சென்ற ராம்நாத்கோவிந்த் வாஜ்பாயை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் வாஜ்பாய் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்