தேசிய செய்திகள்

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள மரியாதை!

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.

புதுடெல்லி

இலங்கை பிரதமர் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு ராஜ்பவனில் ராணுவ வீரர்கள் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.

டெல்லி வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடியை ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்தியா - இலங்கை இடையே வர்த்தக உறவுகள் பற்றி இரு தலைவர்களும் பேசினர். அதுபோல் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

மகிந்தா ராஜ்பக்சே ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்