பம்பை,
சென்னையை சேர்ந்த மனிதி என்ற அமைப்பின் பெண் உறுப்பினர்கள் 11 பேர் சபரிமலைக்கு சென்றனர். அவர்கள் செல்வி என்பவர் தலைமையில் கறுப்பு உடை அணிந்து பம்பை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பம்பை விநாயகர் கோவிலில் பெண்களுக்கு இருமுடி கட்ட அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 6 பெண்கள் தாங்களே இருமுடி கட்டிக்கொண்டு காலை 5.30 மணிக்கு சபரிமலை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். 11 பெண்களில் 9 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெண்களை எதிர்த்தும், ஐயப்பன் சாமியை வேண்டியும் சரணகோஷமிட்டு கொண்டும் ஐயப்ப பக்தர்கள் இருந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பெண்கள் போலீசாரிடம் கேட்டு கொண்டனர். இதனை அடுத்து பெண்களை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்புக்காக நின்று கொண்டனர்.
இந்த நிலையில், பெண் பக்தர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் பலன் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து சிலரை போலீசார் கைது செய்தனர்.