தேசிய செய்திகள்

லாலு வெளியிட்ட பாட்னா பொதுக்கூட்டம் தொடர்பான புகைப்படம் எடிட் செய்யப்பட்டது?

பாட்னா பொதுக்கூட்டம் தொடர்பாக லாலு வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

பாட்னா,

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக தேஷ் பச்சாவ் பிஜேபி பகாவ் (பாஜகவை துரத்துங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்) என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டம் பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணமூல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பீகாரில் மகா கூட்டணி ஆட்சியில் இருந்த போதுதான் கூட்டத்திற்கு லாலு ஏற்பாடு செய்தார், ஆனால் ஜுலை 26-ம் தேதி கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைத்துவிட்டார். பீகாரில் வெள்ளம் காரணமாக கூட்டத்தை தள்ளிப்போடுமாறு கோரிக்கை லாலுவிற்கு முன்வைக்கப்பட்டது, ஆனால் நிராகரித்துவிட்டார். இதனையடுத்தும் எதிர்க்கட்சிகள் வரிசையில் கூட்டத்தில் கலந்துக் கொள்வோர்கள் பட்டியல் தலைவர்களில் ஒவ்வொருவரும் பின்வாங்கும் நிலையானது காணப்பட்டது.

இன்று திட்டமிட்டப்படி கூட்டமாணது தொடங்கி உள்ளது. மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், குலாம் நபி ஆசாத், சரத் யாதவ், ஜக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த கட்சி தலைவர்கள், குலாம் நபி ஆசாத் உள்பட பல முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு உள்ளனர். கூட்டத்தில் தொண்டர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகாமாக கூடியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

2019 பாராளுமன்ற தேர்தலை நோக்கி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் லாலுவின் முதல்கட்ட நகர்வாக பார்க்கப்படும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட தொண்டர்கள் என புகைப்படம் மீடியாக்கள் வெளியானது புகைப்படம் லாலுவின் டுவிட்டரில் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக டுவிட்டரில் லாலுவின் களத்திற்கு முன்னால் யாரும் முகம் கொடுக்க முடியாது. காந்தி மைதானம் வந்து எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இப்போது லாலுவின் புகைப்படம் போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டது என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கலாய்க்கப்பட்டு வருகிறது. அவருடைய டுவிட்டரிலே பதில் டுவிட் செய்து உள்ளனர் டுவிட்டர்வாசிகள். என்னால் உங்களைவிட சிறப்பாக எடிட் செய்ய முடியும் எனவும் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளனர். செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட புகைப்படத்திற்கும், லாலு டுவிட்டரில் வெளியான புகைப்படத்திற்கும் அதிகமான வித்தியாசமே காணப்படுகிறது. லாலு டுவிட் செய்த புகைப்படமும், செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட புகைப்படமும் ஒப்பிடப்பட்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு