கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

ஜம்மு நெடுஞ்சாலையில் டிபன் பாக்சில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜம்முவில் உள்ள நர்வால்-சித்ரா நெடுஞ்சாலையில் டிபன் பாக்சில் பொருத்தப்பட்டிருந்த 2 கிலோ எடையுள்ள வெடிகுண்டை போலீசார் கைப்பற்றினர்.

ஜம்மு,

ஜம்முவில் உள்ள நர்வால்-சித்ரா நெடுஞ்சாலையில் டிபன் பாக்சில் பொருத்தப்பட்டிருந்த 2 கிலோ எடையுள்ள டைமர் அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டை (IED) போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்.

முன்னதாக நேற்று மாலை 5:30 மணியளவில் சோதனைச் சாவடி அருகே சாலையில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நர்வால்-சித்ரா நெடுஞ்சாலையில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் படையினருடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெடிகுண்டை கைப்பற்றி அகற்றினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வெடிகுண்டு வைத்தவர்களைக் கைது செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு