தேசிய செய்திகள்

டெல்லியில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கான விருந்து நிகழ்ச்சி தொடங்கியது

டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கான விருந்து நிகழ்ச்சி தொடங்கியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இறுதி கட்ட தேர்தல் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது. இதனை அடுத்து தேர்தல் அமைதியாக வன்முறை எதுவும் இன்றி நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்து கணிப்புகளில் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என கூறப்பட்டது.

இதனை முன்னிட்டு டெல்லியில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியினருக்கு விருந்து அளிக்கப்படும் என கூறப்பட்டது. இதன்படி, பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கான விருந்து நிகழ்ச்சி இன்று தொடங்கியது. பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில், பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று உள்ளனர்.

இந்த விருந்தில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே. வாசன், சரத்குமார், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்று இந்த விருந்தில் பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார், பஞ்சாப் முன்னாள் முதல் அமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே, மத்திய மந்திரி கட்காரி உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்