புதுச்சேரி,
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, பி.எல்.ஓக்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்தனர். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் 16-ந்தேதி புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.
இதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 467 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 9 லட்சத்து 18 ஆயிரத்து 11 வாக்காளர்கள் இடம்பெற்றனர். லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தகுதியுள்ள 42 ஆயிரத்து 719 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 16 ஆயிரத்து 619 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 9 லட்சத்து 44 ஆயிரத்து 211 வாக்காளர்கள் புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் - 4,43,595
பெண் வாக்காளர்கள் - 5,00,477
மூன்றாம் பாலினத்தவர்கள் - 139
புதுச்சேரி - 7,21,296
காரைக்கால் - 1,55,515
மாஹி - 29,736
யானம் - 37,664