தேசிய செய்திகள்

பா.ஜனதா பெண் வேட்பாளர் மீது வழக்கு பதிவு - ஓட்டல் அறையில் இருந்த ரூ.4 லட்சம் பறிமுதல்

பா.ஜனதா பெண் வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்த ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

மோதிஹரி,

பீகார் மாநிலத்தில் உள்ள ஷியோகர் தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், வேட்பாளருமான ரமாதேவி சாம்பரன் மாவட்டம் சாடவுனி என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

அவரது அறையில் தேர்தல் அதிகாரிகளும், வருமான வரி அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் இல்லாமல் ரூ.4 லட்சத்து 9 ஆயிரம் இருந்தது. பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் ரமாதேவி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதுபற்றி ரமாதேவி கூறும்போது, இது எனது ஆதரவாளர்கள் எனக்கு கொடுத்த நன்கொடை. இதை நான் வைத்திருந்ததில் தவறு எதுவும் இல்லை என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது