தேசிய செய்திகள்

தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தொழிற்சாலையில் தீ விபத்து

தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவன கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. தடுப்பூசி வெளியாவதில் பாதிப்பு எதுவும் இல்லை என கூறப்பட்டு உள்ளது.

புனே

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்காக கட்டப்படும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, ஆனால் இது கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை பாதிக்காது என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனத்தின் நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் டெர்மினல் கேட் 1 க்குள் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு மள மள வெனபரவியது.10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்