தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதல்முறையாக 1,000 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்; கேரளாவில் இன்று பயன்பாட்டுக்கு வந்தது

இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா நோயாளிகள் 1,000 பேருக்கு ஒரே நேரத்தில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கும் தற்காலிக மருத்துவமனை கேரளாவில் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவிலேயே முதல் முறை

கேரள அரசும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் இதுவரை ஆக்சிஜன் வசதியுள்ள ஆயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் எங்குமில்லை. இந்த தற்காலிக சிகிச்சை மையம் குறித்த படங்களை வெளியிட்டு முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொச்சி அருகே அம்பலமுகலில் உள்ள கொரோனா சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வருகிறது. கொச்சி பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நேரடியாக ஆக்சிஜன் இந்த சிகிச்சை மையத்துக்கு வினியோகிக்கப்படும். 130 டாக்டர்கள், 240 செவிலியர்கள் உள்பட 480 ஊழியர்கள் இங்கு பணியாற்றுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மாவட்ட மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மருத்துவமனையில் சுழற்சி முறையில் பணியாற்ற 1,000 செவிலியர்கள், 200 டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். தனியார் துறையிலிருந்தும் நர்சுகள், டாக்டர்கள் வருமாறு கேட்டுக்கொண்டோம். கொரோனாவில் பாதிக்கப்பட்டு சுவாச பிரச்சினை இருக்கும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெறலாம் என தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்