தேசிய செய்திகள்

கேரள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராஜினாமா

கேரள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான வி.எம். சுதீரன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த உறுப்பினரான வி.எம். சுதீரன் விலகியுள்ளார். அக்கட்சியின் பொது செயலாளர் (பொறுப்பு) தாரிக் அன்வர் ஊரில் இல்லாதபோது, கேரள காங்கிரஸ் கமிட்டியின் தலைமையுடன் அவருக்கு மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது.

கடந்த வாரம், கேரள காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகார கமிட்டியின் பதவியில் இருந்து அவர் விலகினார். எனினும், இதற்கான காரணம் எதனையும் அவர் வெளியிடவில்லை. பல தசாப்தங்களாக காங்கிரசில் இருந்து வந்த அவர் பதவி விலகலுக்கான காரணம் எதனையும் வெளியிடாத சூழலில், பத்திரிகையாளர்கள் சந்திப்பினையும் தவிர்த்து விட்டு, வீட்டில் இருந்து வருகிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தினை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது