தேசிய செய்திகள்

பா.ஜ.க.விற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு: சந்திரசேகர ராவை வாழ்த்திய முன்னாள் பிரதமர் தேவகவுடா!

முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பாஜகவை இந்த நாட்டிலிருந்து விரட்ட அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் இல்லையெனில் சமுதாயம் சீரழிந்துவிடும். மேலும், இளைஞர்களும் நாட்டு மக்களும் முன்னின்று செயல்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

வாழ்த்துக்கள்! நீங்கள் மிகப்பெரிய யுத்தத்தை முன்னெடுத்துள்ளீர்கள். நாங்கள் உங்களுடன் உள்ளோம். நாம் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராட வேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்த தகவலை தெலுங்கானா மாநில முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலளித்த தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், முன்னாள் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு, விரைவில் பெங்களூருவில் அவரைச் சந்திப்பேன் என்றார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று பேசிய சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி விரைவில் அம்மாநிலத்திற்கு வரவுள்ளார் என்றும் தான் விரைவில் மும்பை சென்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்து தேசம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு