புதுடெல்லி,
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.