தேசிய செய்திகள்

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி

ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியர் மருத்துவமனையில் சந்திரசேகர ராவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரசேகர ராவ் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

SCROLL FOR NEXT