லக்னோ,
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உடல்நலம் பாதிக்கப்பட்டு லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக கல்யாண்சிங்கிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறுகையில், அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையின் பயனாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.
கல்யாண் சிங்கிற்கு 89 வயதாகிறது. அவா ராஜஸ்தான் கவானராக இருந்தபோதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நினைவிழந்த நிலையில் மோசமான உடல்நிலையுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.