தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் இன்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர். நக்சலைட்டுகளின் தெற்கு பஸ்தர் பிரிவின் கிஸ்தாரம் பகுதி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களான இவர்கள் மாநிலத்தின் 'பூனா மார்கம்' (புனர்வாழ்வு) திட்டத்தின் கீழ் சரணடைந்தனர் என்று பஸ்தர் காவல்துறைத் தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, மாநில அரசின் சரணடைதல் மற்றும் புனர்வாழ்வுக் கொள்கையால் தாங்கள் ஈர்க்கப்பட்டதாக அந்த நக்சலைட்டுகள் தெரிவித்தனர் என்று கூறினார். சரணடைந்தவர்களில் சோதி ஜோகா பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. டபார் கங்கா மாட்கம் கங்கா, சோதி ராஜே மற்றும் மாட்வி புதாரி ஆகியோர் மீது தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குஜராத்தில் தரையிறக்கம்

மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?