கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்: மத்திய சுகாதார மந்திரி தகவல்

2 ‘டோஸ் ’ கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை விட 2 டோஸ் செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்ட நிலவரம் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள்:-

* இந்தியாவில் இன்று (நேற்று) காலை 7 மணி நிலவரப்படி 113 கோடியே 68 லட்சத்து 79 ஆயிரத்து 685 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் டோசாக 75 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 81 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 2-வது டோசாக 38 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 604 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் டோசாக போடப்பட்ட 75 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 81-ல் இருந்து, 2-வது டோசாக செலுத்தப்பட்ட 38 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 604-ஐ கழிக்கிறபோது அது 37 கோடியே 45 லட்சத்து 68 ஆயிரத்து 477 ஆகும். இதுவே முதல் டோஸ் போட்டவர்கள் எண்ணிக்கை ஆகும். எனவே ஒரு டோஸ் போட்டவர்களைக் காட்டிலும் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகம்.

* நாட்டில் தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தின் சாதனை, முதல் முறையாக ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை விட 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

* நாட்டின் கூட்டு மனப்பாங்குக்கு பாராட்டுகள்.

*ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள் என்ற ஒரு மாத கால பிரசாரத்தின் முடிவில் நாட்டில் தகுதி வாய்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டு விடுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றுபட்டு வெல்வோம் என கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்