பனாஜி,
கோவாவில் வருகிற 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரியான மம்தா பானர்ஜி வருகிற 28ந்தேதி கோவாவுக்கு வருகிறார்.
இந்த நிலையில், பனாஜி, நேவலிம் மற்றும் சங்குவெம் ஆகிய 3 பகுதிகளில் நடந்த வெவ்வேறு நிகழ்ச்சிகளில் 300 பேர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தனர்.
கோவாவில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசை தாக்கும் வகையில், திரிணாமுல் காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான பலீரோ கூறும்போது, இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது. நம்ப தகுந்த மாற்றம் இந்நேரத்தின் அவசியம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். மம்தாவின் தலைமையின் கீழ் மட்டுமே இது நடைபெறும் என கூறியுள்ளார்.