பனாஜி,
அமெரிக்க மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இது குறித்து கோவா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் பரிக்கரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு பின், பரிக்கரின் உடல் நலம் குறித்து டாக்டர்கள் மறுஆய்வு செய்வர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கணைய அழற்சி நோய் காரணமாக கடந்த சில மாதங்களாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் பரிக்கர், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.