தேசிய செய்திகள்

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு கிடையாது - மத்திய விசாரணை குழு

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய விசாரணை குழு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கடந்த 6 நாட்களில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 63 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. அரசு தரப்பில் மறுக்கப்பட்டு மூளை அழற்சி காரணம் என கூறுப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டு இருக்கிறது. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய விசாரணை குழு தெரிவித்து உள்ளது. மத்திய விசாரணை குழுவிடம் இடம் பெற்று உள்ள சப்தார்ஜங் மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் ஹரிஷ் செல்லாணி பேசுகையில், கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் உயிரிழப்பு என்பது என்பது உண்மையானது, என் கூறிஉள்ளார். மத்திய விசாரணை குழுவானது கடந்த சனிக்கிழமை சென்று ஆய்வை மேற்கொண்டது.

விசாரணை குழுவானது கடந்த திங்கள் கிழமை அன்று அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது. நாங்கள் இன்று இறுதி விசாரணை அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய உள்ளோம் என டாக்டர் ஹரிஷ் செல்லாணி கூறிஉள்ளாதாக தி இந்து செய்தி வெளியிட்டு உள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் வழங்கப்பட்ட தரவுகளை வைத்து பார்க்கும் போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகதான் உயிரிழப்புக்கள் ஏற்பட்டது என தெரியவில்லை. தரவுகளின்படி, கடந்த ஆண்டு உயிரிழப்புக்களுடன் ஒப்பீடுகையில் இந்தாண்டு உயிரிழப்பு குறைவானதுதான், என டாக்டர் ஹரிஷ் கூறிஉள்ளார்.

இதற்கிடையே இந்திய மருத்துவ கவுன்சில் மூன்று நபர்கள் கொண்ட குழுவை விசாரணைக்கு கோரக்பூர் மருத்துவமனைக்கு அனுப்பியது.

இந்திய மருத்துவ கவுன்சில் தேசிய தலைவர் கே.கே. அகர்வால் பேசுகையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்களுக்கு தெரியவேண்டும். இவ்விவகாரத்தில் பதில் பெறவேண்டிய பிற கேள்விகளும் உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே எச்சரிக்கப்படாதது ஏன்? ஆக்ஸிஜன் சப்ளை தடைக்கு அனுமதிக்கப்பட்டது ஏன்? அப்போது என்ஜினியர்கள் என்ன செய்துக் கொண்டு இருந்தார்கள்? அங்கு ஏதேனும் மருத்துவ அலட்சியம் இருந்ததா?.

மருத்துவ ரீதியாக இந்த உயிரிழப்புகளை தவிர்த்து இருக்க முடியுமா? அல்லது நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டதா என்பதை உடனடியாக அறிவதே நோக்கமாகும், என கூறிஉள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு